கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கம்பங்கூழில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உங்கள் உடல் எடை குறையும். கம்பில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால் இதனை உண்ணும்பொழுது உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கும் மேலும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலையும் குறைக்கும்