Home /   Categories /   இயற்கை பருப்பு வகைகள்  /   கருப்பு உளுந்து 500g
  • கருப்பு உளுந்து 500g

கருப்பு உளுந்து 500g

Per piece

Product details
உளுந்தில் வெள்ளை உளுந்து, கருப்பு உளுந்து என இருவகை இருக்கின்றன. கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மலம் கட்டிக் கொள்ளாமல் இலகுவாக வெளியேறவும் கருப்பு உளுந்து வழிவகை செய்கிறது. செரிமான திறனும் மேம்படுகிறது.கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.உடலின் சர்க்கரை அளவை மிதமான அளவில் வைக்க உதவுகிறது.உடலில் அடிபட்ட இடத்தில் பிராணவாயு அதிகம் கிரகிக்க செய்து புண்களையும், காயங்களையும் வேகமாக ஆற்றுகிறது.தோலில் ஏற்படும் தழும்புகள், ஆதீத சூரிய ஒளியால் தோல் கருத்துப் போதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை கருப்பு உளுந்து அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் தீர்கிறது.

Similar products