Home /   Categories /   Red Rice / பாரம்பரிய சிவப்பரிசி  /   Organic Navara Rice / நவார அரிசி
  • Organic Navara Rice / நவார அரிசி

Organic Navara Rice / நவார அரிசி

Per piece

Product details

நவார அரிசி எல்லா நோய்களையும் குணப்படுத்தும் தாய்" என்றே ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவார்களாம். சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை இந்த அரிசியை சாப்பிடலாம். கேரளாவில் மிக முக்கிய மூலிகை தன்மை கொண்ட அரிசியாக இது பார்க்கப்படுகிறது. 

இந்த அரிசியை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் கருவில் உள்ள சிசு மிக ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகள் இந்த அரிசியை சாப்பிட்டு வருவதன் மூலமாக இளம் வயதிலே குழந்தைகள் புத்திசாலியாக இருப்பார்கள். அத்துடன் சுறுசுறுப்பும் கூடும்

உடலுக்கு வெளியில் இருக்கும் நோய்களை நம்மால் எளிதில் உணர இயலும். ஆனால், உள்ளுக்குள் இருக்க கூடிய நோய்களை அவ்வளவு எளிதில் நம்மால் உணர முடியாது. அந்த வகையில், இந்த நவார அரிசியை சாப்பிட்டு வருவதன் மூலமாக உள்ளுக்குள் நோய்கள் உருவாவதை தடுக்கும். அத்துடன் உள் வலிகளையும் இது குணப்படுத்தும். 

இந்த நவார அரிசியை சமையலில் பயன்படுத்தினாலே போதும். இரத்தத்தை சுத்திகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் 

நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இந்த அரிசியில் இருப்பதால் மிக விரைவிலே செரிமானம் அடைந்து விடும். வயிற்று உப்பசம், செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

நவார அரிசி சாப்பிட்டு வந்தால் வெள்ளை அணுக்கள் உயர்ந்து எதிர்ப்பு சக்தி பல மடங்காகும்.

இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாடுடன் வைத்து கொள்ள உதவும். எனவே, சர்க்கரை நோயாளிகள் இந்த அரிசியை தாராளமாக சாப்பிடலாம். மேலும், உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளவும் இந்த அரிசி உதவுகிறது.

இந்த அரிசியில் உள்ள மூலிகை தன்மை மூட்டுகளை இலகுவாக்கி இறுக்கமான தன்மையை போக்கி விடும். இதனால் மூட்டு சார்ந்த வலிகள், வீக்கங்கள், போன்றவை இனி இருக்காது. மொத்தத்தில், உடலின் செல்களை புத்துணர்வுடன் வைத்து நீண்ட ஆயுளை தர இந்த நவார அரசி உதவுகிறத

இந்த அரிசியை அப்படியே வேக வைத்து பால் சேர்த்து சாப்பிடலாம். அல்லது பொடியாக்கி கூழ் பதத்தில் பாலுடன் கலந்து சாப்பிடலாம். நாம் சாப்பிட கூடிய மற்ற அரிசி வகைகளை காட்டிலும் இதில் அற்புதமான மூலிகை வாசம் சாப்பிடும் போது ஏற்படும். இது உங்களுக்கு ஆரோக்கியமான சூழலை தரும்.


Similar products