Kondrai Cold Press Oil & Natural Product
திணை / Foxtail Millet / Kangni 500g
Per piece
நார்ச்சத்து தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தின்தோறும் ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும் அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். புரதம் தினை கொண்டு செய்ய பட்ட உணவு வகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடலில் தசைகள் நன்கு வலுபெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்கும். ஞாபக மறதி தினை மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தியை அதிகம் கொண்டிருப்பதால், அதை சாப்பிட்டு வருபவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவதாக மேலை நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதயம் வைட்டமின் பி 1 சத்து இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள், நரம்புகளின் சரியான செயல்பாட்டை உறுதி செய்கிறது. இதயத் தசைகளையும் வலுப்படுத்தி இதயம் சம்பந்தமான எத்தகைய நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது. கொலெஸ்ட்ரால் தினை புரதம் சத்துக்கள் அதிகம் கொண்டது அதே நேரத்தில், கொழுப்பு சத்து அறவே இல்லாத சில வகை உணவுகளில் இதுவும் ஒன்றாகும். தினையை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் கொழுப்பின் அளவை சமநிலையில் வைக்கும். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகம் கூடாமல் தடுத்து, உடல் நலத்தை காக்கும்.