Home /   Categories /   Natural Sweetners / பாரம்பரிய சர்க்கரை வகைகள்  /   உருண்டை வெல்லம் / Round Jaggery 500g
  • உருண்டை வெல்லம் / Round Jaggery 500g

உருண்டை வெல்லம் / Round Jaggery 500g

Per piece

Product details

வெல்லம் பொதுவாக மூன்று வடிவங்களில் கிடைக்கும் - திட, திரவ மற்றும் சிறுமணி. வெல்லம் பல்வேறு வண்ணங்களைக் கொண்டிருக்கிறது, தங்க பழுப்பு நிறத்தில் இருந்து கரும் பழுப்பு வரை வேறுபடுகிறது. கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று என்னவென்றால் அந்த நன்றாக கருப்பாக உள்ள வெல்லத்தின் சுவை, அதிக இனிப்பு மற்றும் ஆழ்ந்த சுவை கொண்டதாக இருக்கும். உணவு வகைகளில் வெல்லம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.சாம்பார் மற்றும் ரசத்தில் அதன் சுவையை அதிகரிக்க ஒரு சிட்டிகை வெல்லம் சேர்க்கபடுகிறது.பிரபலமான கடலை மிட்டாய் நிலக்கடலை மற்றும் வெல்லம் இரண்டும் கலந்து தயாரிக்கப்படுகிது. இனிப்பு பதார்தங்கள், சாக்லேட், மிட்டாய்கள்,கேக்குகள், முதலியவற்றை தயாரிப்பதற்கு கூட வெல்லம் பயன்படுத்தப்படுகிறது.பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு சிறப்பு இடத்தில் உள்ளது. இதில் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால், இது இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. உணவு உண்டு முடித்ததற்குப் பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும் என்று நம்பப்படுகிறது. மிளகுகுடன் சேர்த்து வெல்லத்தை சாப்பிடும் போது உங்கள் பசியை அதிகரிக்க முடியும்.  ஆயுர்வேத கூற்றுப்படி, வெல்லத்தை வழக்கமான சாப்பிடுவதால் உங்கள் பார்வையை மேம்படுத்த முடியும். வெல்லம் என்பது முகப்பருவிற்கு சிகிச்சையளிக்கவும், உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தவும் உதவிவதாக அறியப்படுகிறது. கல் உப்புடன் சேர்த்து வெல்லத்தை சாப்பிடுவதால், புளித்த ஏப்பம் வரும் தொல்லையை குணப்படுத்த முடியும்.


Similar products